கடந்த சில நாட்களாகவே தமிழ் ராக்கர்ஸ் எனப்படும் பைரசி இணையதளத்தை உபயோகப்படுத்த முடியவில்லை என்றும், அந்த இணையதளம் முடக்கப்பட்டு விட்டதாகவும் தகவல் பரவி வருகிறது.
இணையதளம் வழங்கு நிறுவனம் மூலம் அந்த இணையதளம் முடக்கப்பட்டுவிட்டதாக சில ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றன.
தமிழ்ராக்கர்ஸ் ஒருபுறம் இருந்தாலும் தற்போது பெரும்பாலானோர் டெலகிராமையே முழுமையாக நம்பி இருக்கின்றனர். எனினும், தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் மூலமே டெலகிராமில் வீடியோக்கள் பகிரப்பட்டு வருவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். எனவே தமிழ் ராக்கர்ஸ் இயங்காத பட்சத்தில் பைரசி வீடியோக்கள் வெளியாவது கேள்விக்குறி என்பதே நெட்டிசன்களின் எண்ணமாக உள்ளது.
அமேசான் பிரைம், ஜி5 உள்ளிட்ட ஓடிடி தளங்கள் அளித்து வரும் அழுத்தம் காரணமாகவே தமிழ் ராக்கர்ஸ் இணையதம் முடக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். எனினும் இது நிரந்தரமாக என்பது விரைவில் தெரிய வரும்.
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.