சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் வெளியீடு தள்ளிப்போவது குறித்து சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா - அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி இருக்கும் சூரரைப் போற்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வருகிற அக்டோபர் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், அதற்கான விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்காத நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக அமேசான் நிறுவனம் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி வெளியிட்ட இந்த மாதத்துக்கான ரிலீஸ் குறித்த பட்டியலில் சூரரைப் போற்று படம் இடம்பெறவில்லை. இதனால் சூர்யா ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் சூரரைப் போற்று வெளியீடு தாமதம் குறித்து விளக்கும் விதமாக சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
என்னுடைய எண்ணங்களை உங்களிடம் வெளிப்படுத்த நான் எப்போதும் கடிதங்களை தேர்ந்தெடுப்பதில்லை. ஆனால் இது போன்ற கடினமான காலக் கட்டத்தில், திறந்த மனதுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் நான் உங்கள் முன் நின்று கொண்டிருக்கும் நிலை உருவாகியுள்ளது. ஏனெனில் நான் இப்போது இருக்கும் நிலைக்கு வர என்னுடன் உறுதுணையாக நின்றது நீங்கள் தான்.
சூரரைப் போற்று படத்தை தொடங்கிய போது புது இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதும், பல்வேறு மொழி பேசும் மக்களுடன் பணிபுரிவதும், மாறாவின் உலகத்துக்குள் பலவகையான திறன்களை கொண்டவர்களை கொண்டு வருவது போன்ற விஷயங்கள் தான் சவாலாக இருக்கும் என்று நினைத்தோம். சொல்வதற்கு எளிதாக இருந்தாலும், இதை செயல்படுத்துவது பூதாகரமாக இருந்தது.
சூரரைப் போற்று விமானத் துறை பற்றிய படம் என்று உங்களுக்கு தெரியும். இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயம் என்பதாலும், உண்மையான விமானப் படை விமானங்களை பயன்படுத்தியதாலும் நாங்கள் ஏராளமான அனுமதிகளை பெற வேண்டியிருந்தது. இன்னும் சில அனுமதிகள் நிலுவையில் இருப்பதால், இது போன்ற தருணத்தில நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சூரரைப் போற்று படத்திற்கான காத்திருப்பு தவிர்க்க முடியாததாகிறது.
From us to you, an ode to never-ending support and friendship https://t.co/5KuqtOfX7J#SooraraiPottruOnPrime@primevideoin #SudhaKongara @gvprakash @2D_ENTPVTLTD@rajsekarpandian pic.twitter.com/c447emLnyf
— Suriya Sivakumar (@Suriya_offl) October 22, 2020
சூரரைப் போற்று படத்தின் கதை அனைவரையும் ஈர்க்கக் கூடியதாகவும், ஆர்வமாகவும் இருக்கும். துரதிர்ஷ்டவசமாக, இப்படத்தின் வெளியீடு சற்று தள்ளிப்போகிறது.
எனினும், என்னுடைய நலம் விரும்பிகள் இப்படத்தை எவ்வளவு ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் எங்களிடம் வேறு மாற்றுவழி இல்லை என்பதை நினைக்கையில் வலிக்கிறது. என்னுடைய நலம் விரும்பிகள் இதை அன்புடனும், நம்பிக்கையுடனும் நேர்மறையாக எடுத்துக் கொள்வார்கள் என்று தனிப்பட்ட முறையில் நம்புகிறேன்.
விரைவில் டிரைலர் மற்றும் மற்ற பல அப்டேட்டுகளுடன் உங்களை சந்திக்கிறோம். இந்த கடிதத்துடன் நமது நட்பு மற்றும் பிணைப்புக்காக ஒரு ஃப்ரெண்ட்ஷிப் பாடலும் வெளியாகிறது.
இவ்வாறு சூர்யா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.