தமிழ் சினிமாவில் உள்ள எதார்த்தமான இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. இவர் கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
தற்போது விஜய் சேதுபதியை வைத்து மாமனிதன் என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும் அவசரம் என்று ஒரு பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு குறித்து ரசிகர்கள் பலரும் என்னவென்பது புரியாமல் எதுவாக இருந்தாலும் காவல்துறையிடம் புகார் அளிக்குமாறு கூறியிருக்கின்றனர்.
சீனு ராமசாமியின் இந்த பதிவைத் தொடர்ந்து இயக்குநர் சீனு ராமசாமி வீட்டுக்கு போலீசார் விரைந்திருப்பதாக கூறப்படுகிறது.
முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படம் விவகாரத்தில் தான் சீனு ராமசாமிக்கு மிரட்டல் வந்திருப்பதாகவும், இதுகுறித்து சீனு ராமசாமி விரைவில் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும்
— R.Seenu Ramasamy (@seenuramasamy) October 28, 2020
அவசரம்.
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.