பட்டாஸ் படத்திற்கு பிறகு தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும், கார்த்திக் நரேன் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் கார்த்திக் நரேன் இயக்கும் படம் தனுஷின் 43-வது படம் என்று படத் தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது. பட்டாஸ் வெற்றிக்கு பிறகு மீண்டும் தனுஷூடன் இணைவதில் மகிழ்ச்சி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தமாகி இருக்கிறார். அசுரன் படத்திற்கு பிறகு தனுஷின் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவிருக்கிறார். சென்னை பின்னணியில் நடக்கும் கொலையை மையப்படுத்தி சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இது உருவாகிறது. Very Happ...
Entertainment is Everything..