நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப பணியாளர்கள் என 20 பேரை மட்டும் வைத்து சின்னத்திரை படப்பிடிப்பை துவங்க கடந்த 21-ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் 20 பேரை மட்டும் வைத்துக் கொண்டு படப்பிடிப்பை துவங்க முடியாது, குறைந்தது 50 பேராவது தேவை என்று சின்னத்திரை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை பரிசீலித்த தமிழக அரசு அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை 31.05.2020 முதல் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் சின்னத்திரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து கட்டுப்பாடுகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில், சிறிய பட்ஜெட் படங்களின் படப்பிடிப்பை துவங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சிறு பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், இயக்குனர் பாரதிராஜாவும் தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது, வணக்கம் முதல்வர் அவர்களுக்கு, படிப்படியாக மக்களின் அன்றாட வாழ்வை மீட்டுக் கொண்டிருக்கும் சிறப்பு மிகுந்த பணிக்க...
Entertainment is Everything..