விஜய் சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில சேலஞ்சுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்தியாவில் பிரபலங்கள் பலரும் கிரீன் இந்தியா சேலஞ்சை தனக்கு நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். தெலங்கானா எம்.பி சந்தோஷ் குமார் உலக சுற்றுச்சூழல் தினத்தன்று மரம் நடும் கிரீன் இந்தியா சேலஞ்ச்சை தொடங்கி வைத்தார். இந்த சேலஞ்சை திரைப் பிரபலங்கள் நாகர்ஜூனா, சமந்தா, பிரபாஸ், ராஷ்மிகா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலரும் செய்து தங்களுக்கு நெருக்கமானவர்களை இதனை செய்யச் சொல்லி பகிர்ந்து வந்தனர். அந்த வகையில், தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மகேஷ் பாபு தனது பிறந்தநாளன்று இந்த சவாலை ஏற்றுக்கொண்டு மரம் ஒன்றை நட்டார். பின்னர், தமிழ் சினிமாவின் முன்னணி நடிரான விஜய் மற்றும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், சுருதிஹாசன் உள்ளிட்டோரும் செய்யும்படி வலியுறுத்தினார். மகேஷ்பாபுவின் இந்த சவாலை விஜய் ஏற்பாரா என்று எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில், நடிகர் விஜய் தான் மரம் நடும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார். Thanks a lot brother for taking...
Entertainment is Everything..