Skip to main content

Posts

Showing posts from June, 2020

உங்கள் வேலையை பாருங்கள் - லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் கருத்துக்கு வனிதா காட்டம்

வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம் கடந்த சனிக்கிழமை சென்னையில் நடந்து முடிந்தது. திருமணத்துக்கு அடுத்த நாளே பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தன்னை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் பீட்டர் பால் ஒரு குடிகாரர், பெண் பித்தர் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். எலிசபெத் ஹெலனின் புகார் குறித்து விளக்கமளித்த வனிதா விஜயகுமார், சட்டரீதியாக அதனை எதிர்கொள்வதாக கூறினார். மேலும் பணத்திற்காக எலிசபெத் புகார் கொடுத்திருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கிடையே நடிகை லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இந்த திருமணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். அதில், பீட்டர்பாலுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். முறையாக விவாகரத்து பெறவில்லை. வனிதா - பீட்டர் பால் திருமணத்திற்கு முன்பாகவே அவரது முதல் மனைவி புகார் அளித்திருக்கலாமே, அவர்களது திருமணத்தை முன்பே ஏன் நிறுத்தவில்லை? என்று கேள்வி எழுப்பினார். மேலும் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது பதிவில், வனிதா தன...

நேடிரயாக ஓடிடி தளத்தில் வெளியாகும் லக்‌ஷ்மி பாம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படங்களில் மாபெரும் வெற்றி பெற்ற படம் காஞ்சனா. இந்த படத்தில் லாரன்ஸ் ஜோடியாக ராய் லட்சுமியும், திருநங்கை கதாபாத்திரத்தில் சரத்குமாரும் நடித்திருப்பார்கள். காமெடி கலந்த திகில் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தயடுத்து, காஞ்சனா 2, காஞ்சனா 3 படங்கள் உருவாகின. இந்த நிலையில், காஞ்சனா படத்தை இந்தியில் லட்சுமி பாம்(Laaxmi Bomb) என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இந்தி பதிப்பையும் லாரன்ஸே இயக்கியிருக்கிறார். லாரன்ஸ் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமாரும், அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானியும் நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், தற்போது படத்தை நேடிரயாக ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. Watch First day First show of #LaxmmiBomb from the comfort of your homes. Do baatein guaranteed hai : hassoge bhi aur darroge bhi 👻 Only on @DisneyplusHSVIP with #DisneyPlusHotstarVIPMultiplex . @advani_kiara @TusshKapoor @offl_Lawrence @Shabinaa_Ent @foxstarhindi pi...

என்னை ஆறாவது முறையாக கொன்றிருக்கிறார்கள் - பாடகி ஜானகி வேதனை

வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள் என்று பாடகி ஜானகி ரசிகருடன் பேசும் போது வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். திரையுலகில் பழம்பெரும் பின்னணி பாடகியாக இருப்பவர் எஸ்.ஜானகி. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 17 மொழிகளில் சுமார் 45 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். 4 தேசிய விருதுகளையும், 33 மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். கடந்த 2016-ல் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது தனது மகனுடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்னதாக, இவருக்கு உடல்நலம் சரியில்லை என்றும், காலமானதாகவும் வதந்தி பரவியது. ஆனால் அவரது குடும்பத்தினர் அதனை மறுத்தனர். இந்த நிலையில், நேற்றும் ஜானகி உடல்நிலை குறித்து தவறான தகவல் பரவி வர அவருடைய மகன் முரளி கிருஷ்ணா மற்றும் இசையமைப்பாளர் தீனா அந்த தகவலை மறுத்து ஜானகி நலமுடன் இருப்பதாக விளக்கம் அளித்தனர். இதற்கிடையே ஜானகி ரசிகர் ஒருவருடன் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் ஜானகி பேசியிருப்பதாவது, எல்லாருமே போன் போட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை போன் தெரியுமா? எதற்கு இந்த மாதிரியான செய...

மீண்டும் இதுபோன்ற ஒரு அநியாயம் நிகழக்கூடாது - சிவகார்த்திகேயன்

கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸின் மரணம் தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். தந்தை, மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவத்திற்கு இந்தியா முழுவதும் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்த கொடூர குற்றத்தின் பின்னணியில் இருப்பவர்கள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் மூலம் இதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், நம் அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நீதியை நிலைநாட்ட அரசு முன்வர வேண்டும் என்று தான் கேட்டுக் கொள்வதாக சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார். The ppl behind the brutal crime sh...

காவல்துறையை பெருமைப்படுத்தி படம் எடுத்ததற்காக வேதனைப்படுகிறேன் - இயக்குனர் ஹரி

கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸின் மரணம் தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். தந்தை, மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவத்திற்கு இந்தியா முழுவதும் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், போலீஸ் கதாபாத்திரங்களை மையப்படுத்தி சாமி, சிங்கம், சாமி ஸ்கொயர், சிங்கம் 2, சிங்கம் 3 படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக் கூடாது. அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே. காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுத்தி உள்ளது. காவல்துற...

அஜித் மற்றும் தக்‌ஷா குழுவுக்கு குவியும் பாராட்டு

சென்னை ஐஐடி-யின் தக்‌ஷா குழுவுக்கு கடந்த ஆண்டு அஜித் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அஜித்தின் வழிகாட்டுதலின் கீழ் தக்‌ஷா குழு உருவாக்கிய ட்ரோன் நீண்ட நேரம் வெற்றிகரமாகப் பறந்து சாதனை படைத்தது. மேலும் பெங்களூருவில் நடந்த ட்ரோன் ஒலிம்பிக் போட்டியிலும் கலந்துகொண்டு பரிசுகளை வென்றது. தற்போது இந்த தக்‌ஷா குழுவின் உதவியுடன் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமுள்ள இடங்களில் ட்ரோன்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்க நடிகர் அஜித் யோசனை வழங்கியதாக மருத்துவர் கார்த்திக் நாராயணன் சமீபத்திய அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். இதையடுத்து சிவப்பு மண்டலங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையில் அதற்காக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வெற்றி பெற்றது. அந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். இந்த நிலையில், தற்போது இந்த பணி கர்நாடகாவிலும் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கர்நாடகா துணை முதல்வர் அஸ்வத் நாராயண் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, Kudos to Team #Dhaksha , mentored by filmstar #AjithKumar , for developing a way to sanitize large areas a...

ஜெயராஜ் - ஃபென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்

கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸின் மரணம் தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். தந்தை, மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவத்திற்கு இந்தியா முழுவதும் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த், ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார். ஜெயராஜின் மனைவி மற்றும் மகளை தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு ரஜினி ஆறுதல் கூறியதாக கராத்தே தியாகராஜன் கூறியிருக்கிறார்.

வனிதாவை திருமணம் செய்த பீட்டர் பால் மீது முன்னாள் மனைவி போலீசில் புகார்

வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம் நேற்று நடந்து முடிந்த நிலையில், பீட்டர் பாலின் முன்னாள் மனைவி ஹெலன், பீட்டர் பால் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். வனிதாவுக்கும் - பீட்டர் பாலுக்கும் கிறிஸ்தவ முறைப்படி நேற்று திருமணம் நடந்து முடிந்தது. இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அவர் புகார் மனுவில், தன்னை விவாகரத்து செய்யாமல் பீட்டர் பால் இன்னொரு கல்யாணம் செய்து கொண்டதாகவும், தங்களுக்கு 2 குழந்தைகள் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் பீட்டர் பாலும், தானும் கடந்த 7 வருடங்களாக பிரிந்து வாழ்வதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். ஹெலனின் இந்த மனுவை தொடர்ந்து பீட்டர் பால் - வனிதா திருமண அறிவிப்பு வெளியான உடனேயே புகார் அளித்திருக்கலாமே என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து வனிதா தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை.

'அதிகார அத்துமீறல்' முடிவுக்கு வரவேண்டும் - நடிகர் சூர்யா காட்டம்

கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸின் மரணம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். தந்தை, மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 'மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களுக்குகூட மரண தண்டனை கூடாது' என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன. சாத்தான்குளம் காவல் நிலையத்தில், இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம் ஏற்படுத்தும் அளவிற்கு நிகழ்ந்த போலிஸாரின் 'லாக்கப் அத்துமீறல்' காவல் துறையின் மாண்பை குறைக்கும் செயல். 'இது ஏதோ ஒரு இடத்தில் தவறி நடந்த சம்பவம்' என்று கடந்து செல்ல முடியாது, போலீஸாரால் கொடூரமான தாக்குதலுக்கு ஆளான தந்தை ஜெயராஜ், மகன் ஃபென்னிக்ஸ் இர...

அயலான் குறித்த தவறான தகவல் - ரகுல் ப்ரீத் சிங், ரவிக்குமார் விளக்கம்

இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து அயலான் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். இந்த நிலையில், ரகுல் ப்ரீத் சிங் படப்பிடிப்புக்கு வர மறுப்பதால், அவரை படத்தில் இருந்து நீக்கி விட்டு வேறு ஒருவரை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்திருப்பதாக தவறான செய்தி வெளியானது. அதனை குறிப்பிட்டு அதற்கு பதிலளித்த ரகுல், யார் படப்பிடிப்பை துவங்கியிருக்கிறார்கள் என்று சொல்லுங்கள். நான் வேலை செய்ய காத்திருக்கிறேன் என்று கூறினார். ரகுலின் இந்த பதிவை குறிப்பிட்டு இயக்குனர் ரவிக்குமார் கூறியிருப்பதாவது, நான் பணிபுரிந்த நடிககைகளில் சிறந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங். எனவே இதுபோன்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். நிலைமை சீராகி, படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்று நாங்கள் காத்திருக்கிறோம் என்று கூறினார். When will we have responsible journalism. When will media start checking facts . 😂 stooping so low just for some extra hits 🤷‍♀️ plz tell me who is starting shoot and where @BOWorldwide cos I...

நயன்தாராவை முந்திய மாளவிகா மோகனன்

ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுனமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். மாஸ்டர் படம் வெளியாவதற்கு முன்பே முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்துவிட்ட மாளவிகாவுக்கு பெரிய பட்ஜெட் பட வாய்ப்புகளும் குவிந்த வருகின்றன. இந்த நிலையில் மாளவிகா அடுத்ததாக பாலிவுட்டில் ஆக்‌ஷன் படமொன்றில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்காக மாளவிகா தற்காப்பு கலைகளை கற்று வருகிறாராம். இந்த படத்தை ஸ்ரீதேவி நடித்த மாம் படத்தை இயக்கிய ரவி உத்யவார் இயக்குகிறார். இந்த படத்தில் நடிக்க மாளவிகா மோகனனுக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவரது சம்பளம் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவை விட அதிகம் என்று கூறுகிறார்கள். நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.4 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஊரடங்கு முடிந்து நிலைமை சீரான பிறகு படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்

தமிழ்த் திரையுலகின் பிரபல மூத்த நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். கடந்த 1995-ல் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் அனைத்துக்கும் போதிய வரவேற்பு கிடைக்காததால் திரையுலகிலிருந்து விலகினார். பின்னர் 2000-ல் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2007-ல் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர். பின்னர், ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவருடன் காதல் ஏற்பட்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவரையும் 2010-ல் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் மட்டும் இருக்கிறார். வனிதா தற்போது தனது மகள்களுடன் சென்னையில் வசித்து வருகிறார். தனது அப்பா விஜயகுமாருடனான மோதலால் அடிக்கடி செய்திகளில் இடம்பெற்ற இவரை, பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலமாக்கியது. தனது அதட்டலான தொனியால் பிரபலமடைந்த இவர், பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இந்த நிலையில், வனிதா, கிராபிக் டிசைனரான பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம்...

மலேசியா வாசுதேவன் வாழ்க்கைப் படத்தில் விஜய் சேதுபதி?

தமிழ் சினிமாவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், யேசுதாஸ் உள்ளிட்டோர் வரிசையில் முக்கிய இடத்தை பிடித்தவர் மலேசியா வாசுதேவன். பாடகராக மட்டுமில்லாமல் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வந்தார். தொடக்கத்தில் மலேசியாவில் ஒளிபரப்பான நாடகங்களில் நடித்த வந்த இவர் பின்னர் சென்னை வந்து தமிழ் சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தில் இளையராஜா இசயைில் இவர் பாடிய ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிகுஞ்சு வந்ததுன்னு என்கிற பாடல் மூலம் பட்டிதொட்டி எங்கும் எதிரொலிக்க இவருக்கு பாடல் வாய்ப்புகள் குவிந்தன. சுமார் 8 ஆயிரம் பாடல்களை பாடியிருக்கும் இவர் குரலில் பல்வேறு ஹிட் பாடல்கள் இன்னமும் மனதை உருக்கி வருகின்றன. அத்துடன் 80-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர, வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், மலேசியா வாசுதேவனின் வாழ்க்கையை படமாக எடுக்க அவரது மகனும், நடிகருமான யுகேந்திரன் முடிவு செய்திருக்கிறார். மலேசியா வாசுதேவன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி பொருத்தமாக இருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். விரைவில் அதற்கான பேச்சுவார்த்தை துவங்கும் என்று எதிர...

கொரோனா காலத்தில் ரூ.1 லட்சம் மின் கட்டணம் - நடிகை கார்த்திகா அதிர்ச்சி

நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர். கோ படத்தில் ஜீவா ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அதன்பின்னர் புறம்போக்கு, வா டீல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கார்த்திகாவுக்கு வேறு தமிழ் படங்கள் அமையவில்லை. மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தார். கார்த்திகா நாயர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். அங்கு மின் அமைப்பை கவனித்து வரும் அதானி குழுமத்தை குறிப்பிட்டு அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். கொரோனா காலத்தில் தனது வீட்டின் மின் கட்டணம் ரூ.1 லட்சத்தை நெருங்கியிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, என்ன விதமான மோசடி மும்பையில் நடந்து கொண்டிருக்கிறது. ஜூன் மாத மின் கட்டணம் மட்டும் ஒரு லட்சத்தை நெருங்கியிருக்கிறது. (அதிகாரிகளால் மின் கட்டண கணக்கு எடுக்க முடியாத நிலையில், அவர்களின் தோராய கணக்கு படி). மும்பையில் இருக்கும் பலரும் இதுபோன்றே குற்றம்சாட்டி வருகிறார்கள். So what kind of scam is @Adani_Elec_Mum conducting in mumbai? June electricity bill close to 1lakh... (based on their ...

பிரபல படத்தொகுப்பாளர் ஜெயச்சந்திரன் மரணம் - விஜயகாந்த் இரங்கல்

கொரோனா பெருந்தொற்று ஒருபுறம் திரையுலகினரை முடக்கியிருக்கும் நிலையில், மறுபுறம் திரையுலகை சேர்ந்தவர்களின் மரணமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், பிரபல திரைப்பட படத்தொகுப்பாளர் ஜி.ஜெயச்சந்திரன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். மறைந்த ஜி.ஜெயச்சந்திரன், விஜயகாந்த், அருண் பாண்டியன், சந்திரசேகர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கார்த்திக், ஸ்ரீதிவ்யா, சரிதா உள்ளிட்ட பலர் நடித்த ஊமை விழிகள் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். இவர் சுமார் 150 படங்களுக்கும் மேல் படத்தொகுப்பாளராக பணிபுரிந்துள்ளார். இவர் பழம்பெரும் திரைப்பட படத்தொகுப்பாளர் வி.கோவிந்தசாமியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு விஜயகாந்த் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, படத்தொகுப்பாளரும், தயாரிப்பாளரும் மற்றும் எனது மிகச்சிறந்த நண்பருமான திரு. G. ஜெயச்சந்திரன் அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவருத்தம் அடைந்தேன்...

போலி பெயரில் பணம் கேட்டு நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பல்

மலையாள சினிமாவில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கிறார் நடிகை பூர்ணா. கேரளாவில் உள்ள கொச்சியில் வசித்து வரும் இவருக்கு, அன்வர் அலி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்போனில் அறிமுகமாகியிருக்கிறார். தான் கோழிக்கோட்டைச் சேர்ந்த நகைக்கடை முதலாளி என்றும், தற்போது துபாயில் வசித்து வருவதாகவும் பூர்ணாவிடம் கூறியுள்ளார். அதன்பிறகு சிலமுறை அவர்கள் செல்போனில் உரையாடியதாகத் தெரிகிறது. அதன்பிறகு சில நாட்களுக்குப் பிறகு, அன்வரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று கூறி சிலர், பூர்ணாவின் வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்கள் பூர்ணாவின் பெற்றோரிடம் அன்வரின் புகைப்படம் என்று டிக்டாக் பிரபலம் ஒருவரின் புகைப்படத்தைக் காட்டி அவருக்குப் பூர்ணாவைத் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளனர். மேலும் அவர்கள் பூர்ணாவின் வீடு, கார் உள்ளிட்டவற்றை செல்போனில் புகைப்படம் எடுத்துச் சென்றதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. இதுகுறித்து பூர்ணா அன்வர் அலியிடம் கேட்டதற்கு, அவர் பூர்ணாவிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதையடுத்து பூர்ணாவின் பெற்றோர் கொச்சி காவல்...

சுஷாந்த் சிங்கின் கடைசி திரைப்படம் - ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களுள் உருவரான சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் 14-ந் தேதி தனது வீட்டிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு பாலிவுட்டில் நிலவி வரும் வாரிசு அரசியல் தான் காரணம் என கஙஙகனா ரனாவத் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். ரசிகர்களும் கரண் ஜோகர், அலியா பட் உள்ளிட்ட பலர் மீது தங்களது கோபங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். சுஷாந்த் சிங் மறைவுக்கு முன்னதாக முகேஷ் சஃப்ரா என்பவரது இயக்கத்தில் தில் பேச்சாரா என்கிற படத்தில் நடித்து முடித்திருந்தார். கொரேனா ஊரடங்கு காரணமாக இந்த படம் திரைக்கு வராமல் இருந்தது. இந்த படத்தில் சுஷாந்த் ஜோடியாக சஞ்சனா சங்கி நடித்திருக்கிறார். முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் சயீப் அலி கான் நடித்திருக்கிறார். பாஃக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பிரபலங்கள் பலரும் சுஷாந்த் சிங் ரசிகர்களின் விருப்பப்படி படம் திரையரங்கில் வெளியாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்த நிலையில...

கொரோனா தடுப்பு பணியில் அஜித்தின் பங்களிப்பு

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று இந்தியாவிலும் அதன் கோர முகத்தைக் காட்டி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தொற்று பரவி வருவதால் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலும் பரவல் கூடிய வண்ணமே இருக்கிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் என பலரும் இரவு பகல் பாராமல் களப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களில் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தடுப்புப் பணியின் ஒரு பகுதியாக அனைத்து இடங்களிலும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலங்களில் ட்ரோன்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்க நடிகர் அஜித் யோசனை வழங்கியதாக மருத்துவர் கார்த்திக் நாராயணன் சமீபத்திய அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். சிவப்பு மண்டலங்களில் ட்ரோன்கள் மூலம் கிருமிநாசினிகளை தெளிக்க, நடிகர் அஜித்தின் அறிவுறுத்தலின் படி தக்‌ஷா குழு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். திருநெல்வேலி மாவட்டத்தில...

கவிஞர் கண்ணதாசனுக்கு கவிதையில் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்

மறைந்த கவிஞர் கண்ணதாசனின் 93-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை மூலம் கண்ணதாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கமல் கவிதை பின்வருமாறு, அய்யன் கண்ணதாசருக்கு என் ஆழ்ந்த அன்பின் ஒரு துளி. இன்று உமக்குப் பிறந்த நாளாம். நேற்றும், இன்றும், நாளையும் அதுவாகவே கடவது. இத்தகை வித்தகர் அடிக்கடி கிட்டார்! கிட்டா அடிகளை கடைமடை சேர்க்கும் இவ்வற்புத நதிக்கு ஏது பிறந்த நாள்? இன்றும், என்றும் ஓடும் நதி நீர். என் அடுத்த வரியின் அழியா உயிர் நீர். என்றும், மற்றொரு வீடியோவில், கண்ணதாசனைப் பற்றி பேசும்பொழுதெல்லாம் திரு. MSV அவர்களின் குரலும் எதிரொலிக்கும்..... இருவரும் அழியாப் புகழைப் பெற்றவர்கள். என்று குறிப்பிட்டுள்ளார். கிட்டா அடிகளை கடைமடை சேர்க்கும் இவ்வற்புத நதிக்கு ஏது பிறந்த நாள்? இன்றும், என்றும் ஓடும் நதி நீர். என் அடுத்த வரியின் அழியா உயிர் நீர். (2/2) — Kamal Haasan (@ikamalhaasan) June 24, 2020

அந்த தவறை நான் செய்திருக்கக் கூடாது, விஜய்யை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவிப்பேன் - சேரன்

விஜய் பிறந்தநாளன்று சமூக வலைதளத்தில் விஜய் தொடர்பான பல்வேறு தகவல்கள் டிரெண்டாகி வந்தன. அதில் ஜெயா தொலைக்காட்சியில், ஆட்டோகிராஃப் படம் குறித்து விஜய் பேசியது குறித்த வீடியோ ஒன்றும் பகிரப்பட்டது. அந்த வீடியோவுக்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ப்ரார்த்தனா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு போனில் விஜய் அவர்கள் பாராட்டியதை மறக்க முடியாது.. அதற்கு பின் அவர் என்னோடு சேர்ந்து படம் செய்யவும் ஒத்துக்கொண்டார் . நான் தான் தவமாய்தவமிருந்து படம் முடிக்காமல் இருந்ததால் இயக்க முடியாமல் போயிற்று. அந்த தவறை நான் செய்திருக்க கூடாது.. இந்த தயாரிப்பாளர் பாதிக்கப்படுவாரே என நினைத்து விஜய் படத்தை அன்று கைவிட்டது எவ்வளவு பெரிய தவறு என இப்போது உணர்கிறேன்.. இந்த தவறுக்கான வருத்தத்தை விஜய் அவர்களை பார்த்து நேரில் சொல்லிவிட நினைக்கிறேன்.. ஆனால் நேரில் சந்திக்கும் போது  தெரிவிப்பேன். ப்ரார்த்தனா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு போனில் விஜய் அவர்கள் பாராட்டியதை மறக்க முடியாது.. அதற்கு பின் அவர் என்னோடு சேர்ந்து படம் செய்யவும் ஒத்துக்கொண்டார் . நான் தான்...

விஷால் நடிக்கும் சக்ரா படக்குழுவின் முக்கிய அப்டேட்

ஆக்‌ஷன் படத்திற்கு பிறகு விஷால் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்தார். ஆனால் இருவருக்கிடையேயான மனஸ்தாபத்தால் மிஷ்கின் படத்திலிருந்து விலகினார். இதையடுத்து விஷால் அந்த படத்தை இயக்கி நடிக்க முடிவு செய்தார். தற்போது அந்த படம் பாதியில் நிற்கிறது. அதேநேரத்தில் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் சக்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், ஒரு வாரம் மட்டும் படப்பிடிப்பு மீதமிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ஊரடங்கு முடிந்த பிறகு படப்பிடிப்பு மீண்டும் துவங்கவிருக்கிறது. இந்த படத்தில் விஷால் ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். ரெஜினா கசாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, ரோபோ ஷங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் கிளிம்ஸ் டீசரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில், படத்தின் டிரைலர் வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது....

அருண் விஜய்யின் பாக்ஸர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

மாஃபியா படத்திற்கு பிறகு அருண் விஜய் தற்போது அக்னி சிறகுகள், பாக்ஸர், சினம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர்கள் அறிவழகன், மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இதில், விவேக் இயக்கும் பாக்ஸர் படத்திற்காக அருண் விஜய் தனது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தயாராகி வருகிறார். இந்த படத்தில் அருண் விஜய் ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார். சஞ்சனா கல்ராணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எக்ஸட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். இந்த நிலையில், இந்த படத்தில் வில்லனாக நடிக்க படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Best wishes Producer @MathiyalaganV9 on your debut in #Boxer @arunvijayno1 @vivekkumarknan @EtceteraEntert1 @immancomposer @ritika_offl @DoneChannel1 @krishnanvasant @peterHeinOffl @ganesh_madan @stunnerSAM2 @hinasafaa234 @itsjosephjaxson pic.twitter.com/YOPnuIFgHn — Hema Rukmani ...

வரலட்சுமி சரத்குமார் படத்தின் முக்கிய அறிவிப்பு

வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள டேனி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக திரையுலகம் முடங்கியிருக்கும் நிலையில், திரையரங்குகள் மூடப்பட்டு இன்றோடு 100 நாட்கள் ஆகியிருக்கிறது. திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால், படங்களை வெளியிட முடியாமலும், வாங்கிய கடனை செலுத்த முடியாமலும் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில், தான் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் ஓடிடி-யில் வெளியாகியது. பின்னர் கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் படமும் வெளியாகியது. அட்லி தயாரித்துள்ள அந்தகாரம் படமும், ஜே.எஸ்.கே.சதீஸ்குமார் தயாரிப்பில் 3 படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கின்றன. இந்த நிலையில், பி.ஜி. மீடியா ஒர்க்ஸ் சார்பில் பி.ஜி.முத்தையா தயாரிப்பில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் டேனி படமும் பிரபல ஓடிடி தளமான ஜி5-ல் வெளியாக இருக்கிறது. ஓடிடி ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. A perfect suspense thriller that will send chills down your spine is coming your way soon!...

காதலியை கரம்பிடித்தார் கும்கி அஸ்வின்

கொரோனா ஊரடங்கில் காமெடி நடிகர் கும்கி அஸ்வின் தனது காதலியை கரம்பிடித்தார். முன்னதாக இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக கடந்த வாரம் அறிவித்திருந்தார். இந்த நிலையில், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் இரு வீட்டாரின் நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடந்து முடிந்தது. இவரது திருமணத்தில் திரையுலகை சேர்ந்த யாரும் பங்குபெறவில்லை. கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் திரையுலகினர் பலரும் அஸ்வின் - வித்யாஸ்ரீ தம்பதியினருக்கு தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளம் மூலமும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். லட்சுமி மூவி மேக்கர்ஸ் பட அதிபர்களில் ஒருவரான சுவாமிநாதனின் மகனான அஸ்வினும், சென்னை கே.கே.நகரை சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மகளான வித்யாஸ்ரீயும் காதலித்து வந்தனர். வித்யாஸ்ரீ அமெரிக்காவில் எம்.எஸ். பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். அஸ்வின் - வித்யாஸ்ரீ காதலுக்கு இரண்டு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்தத் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. அஸ்வின் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் அஸ்வின். பின்னர் எத்தன், வந்த...

சமந்தா முத்தம் கொடுத்த தோழிக்கு கொரோனா உறுதி - சமந்தாவுக்கு கொரோனா அச்சம்

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, நாக சைதன்யாவை திருமணம் செய்து ஐதாராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் தடைபட்டுள்ளதால் கணவர், குடும்பம், விவசாயம் என பொழுதை கழித்து வந்த சமந்தாவுக்கு கொரோனா இருக்குமோ என்கிற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு சமந்தா தனது தோழியும், ஆடை வடிவமைப்பாளருமான ஷில்பா ரெட்டிக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்த நிலையில், ஷில்பா ரெட்டி தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஷில்பா மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று உறுதியாகி இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார். எனவே சில நாட்களுக்கு முன்பு சந்தித்துக் கொண்ட சமந்தாவுக்கும் கொரோனா இருக்குமோ என்று அவரது ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

தமிழ் சினிமாவின் சுஷாந்த்களே, தல அஜித்தை பாருங்கள் - வாசுகி பாஸ்கர்

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டது இந்தி திரையுலகில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாரிசு அரசியல் குறித்து விமர்சித்து வருகின்றனர். பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் பற்றியும், தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்கள் பற்றியும் வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகர் அபய் தியோலும் விருது நிகழ்ச்சிகளில் காட்டிய பாரபட்சம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டார். அந்தப் பதிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்தப் பதிவை குறிப்பிட்டு தமிழ் நடிகர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டார். அதில், வெளியிலிருந்து வரும் ஒருவர் வெற்றி பெற்றால் மட்டுமே கொண்டாடப்படுகிறார், கடவுளாகப் பார்க்கப்படுகிறார். கடின உழைப்பு என்றும் தோற்காது என்ற வழக்கமான வாக்கியம், பொதுவில் வெற்றி பெற்றவர்களை வைத்து தான் கொண்டாடப்படுகிறது. உங்களை ஒதுக்கி, உங்கள் முயற்சிகளை மட்டம் தட்டி, அவமானப்படுத்தி, முதுகில் குத்துவார்கள். இந்த கசப்பான அனுபவங்கள் அத்தனையையும் தாங்க வேண்டும் என்று க...

சியான் 60 படத்தில் இணைந்த ஜகமே தந்திரம் கூட்டணி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் விக்ரம் இணைந்து நடிக்கவிருக்கும் சியான் 60 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. சித்தார்த்தின் ஜில் ஜங் ஜக், அவள் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஷ்ரேயாஷ் கிருஷ்ணா தான் கார்த்திக் சுப்புராஜ் - தனுஷ் கூட்டணியில் உருவாகியிருக்கும் ஜகமே தந்திரம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவர் தான் சியான் 60 படத்திற்கும் ஔிப்பதிவு செய்யவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க கேங்கஸ்டர் கதையாக உருவாகவிருக்கிறது. இதுதவிர விக்ரம் கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன், மகாவீர் கர்ணா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தம்பி எல்வினுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த ராகவா லாரன்ஸ்

தமிழ்த் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருகிறார் ராகவா லாரன்ஸ். தொண்டு நிறுவனம் மூலம் சமூக சேவைகளையும் செய்து வருகிறார். இவரது தம்பி எல்வின், திரையுலகில் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறார். லாரன்ஸ் முன்னதாக தனது தம்பியை நடிகராக அறிமுகம் செய்து வைக்கப்போவதாக கூறியிருந்தார். ஆனால், நீண்ட நாட்களாகியும் அது நிறைவேறாமல் இருந்தது. இந்த நிலையில், எல்வின் நேற்று பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிலையில், ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இன்று என் தம்பியின் பிறந்த நாள். ஒவ்வொரு வருடமும் அவனை நான் ஆச்சரியப்படுத்த நினைப்பேன். அதேபோல் இந்த பிறந்தநாளிலும் அவனுக்காக பெரிய ஆச்சரியம் ஒன்று காத்திருக்கிறது. அதற்கான அறிவிப்பு தான் இது. அவனது கனவே, தான் ஒரு நடிகராக வேண்டும் என்பது தான். அது இப்போது நிறைவேறப்போகிறது. நீண்ட நாட்களாக நாங்கள் காத்திருந்தது ஒரு நல்ல திரைக்கதைக்காக தான். தற்போது அது நிறைவேறியிருக்கிறது. Happy birthday my brother Elviin, Here’s my birthday surprise for you. pic.twitter.com/zzp7Anzcl5 — Raghava Lawr...

வலிகளை வலிமையாக்கிய விஜய் - பாரதிராஜா பிறந்தநாள் வாழ்த்து

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரான பாரதிராஜாவும் தனது சமூக வலைதள பக்கத்தில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, என் கலைப் பயணத்தில் துரதிர்ஷ்டவசமாக, நான் தவிர்த்த ஓர் விதை. இன்று வலிகளை வலிமையாக்கி தமிழகத்தின் இளைஞர்களின், சொத்தாக உலகமே, கொண்டாப்படும் "விஜய்க்கு" இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். காதலாகட்டும், நடுத்தர குடும்ப கதாபாத்திரமாகட்டும் நையாண்டி, நக்கலுக்கான அந்த, உடல் பாவனை நடனத்தின் நளினம், சண்டைக்காட்சிகள், அதிலும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை உலகம் முழுவதும் ஈர்த்து வைத்திருக்கின்ற, வெற்றியின் V என்ற முதல் எழுத்தாகக் கொண்ட விஜய்க்கு 46வது பிறந்த நாளில்,எல்லா சிறப்பும் பெற்று, நீடூழிவாழ பாசத்துடன் வாழ்த்துகிறேன். அன்புடன் பாரதிராஜா. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நடனத்தின் நளினம், சண்டைக்காட்சிகள்,அதிலும் மேலாக கோடிக்கனக்கானரசிகர்களை உலகம்மு...

பழம்பெரும் நடிகை உஷா ராணி உடல்நலக்குறைவால் காலமானார்

பழம்பெரும் நடிகை உஷா ராணி (62) நேற்று காலமானார். சென்னை அயப்பாக்கத்தில் வசித்து வந்த இவருக்கு, சில தினங்களுக்கு முன்பாக சிறு நீரக பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான உஷா ராணி, எம்.ஜி.ஆருடன் பட்டிகாட்டு பொன்னையா, சிவாஜியுடன் என்னைப்போல் ஒருவன், கமல்ஹாசனுடன் குமாஸ்தாவின் மகள் மற்றும் ஜக்கம்மா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் மட்டும் 200 படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். உஷா ராணியின் கணவரான சங்கரன் நாயர் கடந்த 2005-ஆம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. உஷா ராணியின் மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காதலியை மணக்கிறார் கும்கி அஸ்வின்

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் அஸ்வின். பின்னர் எத்தன், வந்தான் வென்றான், முப்பொழுதும் உன் கற்பனைகள் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதன்பிறகு இவர் நடித்த கும்கி படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. பின்னர், தில்லு முல்லு, நையாண்டி, ஈட்டி, ஜாக்பாட், கணிதன், தமிழ்படம் 2, தர்மபிரபு, தனுசு ராசி நேயர்களே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் பட அதிபர்களில் ஒருவரான சுவாமிநாதனின் மகனான அஸ்வினும், சென்னை கே.கே.நகரை சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மகளான வித்யாஸ்ரீயும் காதலித்து வந்தனர். வித்யாஸ்ரீ அமெரிக்காவில் எம்.எஸ். பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததையடுத்து, அஸ்வின்-வித்யாஸ்ரீக்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் வருகிற 24-ந் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள அஸ்வின் வீட்டில் நடைபெற இருக்கிறது.

சாந்தனுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் - அந்த தருணத்தை வாழ்நாளில் மறக்க முடியாது என்கிறார் சாந்தனு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாப நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்குக்கு முன்பாக நடந்த மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா விஜய்யின் நடனம், விஜய் - விஜய் சேதுபதி முத்தம் என நல்ல வரவேற்பை பெற்றது. இதில், விஜய்யுடன் இசை வெளியீட்டு விழாவில் நடனமாடியது குறித்து பேசிய சாந்தனு, படப்பிடிப்பு நடக்கும் போது தான் விஜய் அண்ணாவிடம் இசை வெளியீட்டு விழாவில் தன்னுடன் ஆட வேண்டும் என்று கேட்டதாக கூறினார். ஆனால், தன்னை ஆட அழைத்தால் கொன்று விடுவேன் என்று விஜய் சாந்தனுவிடம் கூறியிருக்கிறார். ஆனால், தன்னை இசை வெளியீட்டு விழாவில் எனக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக அண்ணா என்னையும், அனிருத்தையும் மேடைக்கு அழைத்து எங்களுடன் ஆடினார். அந்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது என்றார். சாந்தனுவின் சமீபத்திய வீடியோக்களான கொஞ்சம் கொரோனா நெறைய காதல், ஒரு சான்ஸ் கொடு உள்ளிட்ட வீடியோக்களை பார்த்து தன்னை பாராட்டியதாகவும் கூறியுள்ளார்.

ரசிகரின் அன்பைப் பார்த்து நெகிழ்ந்த கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் மாபெரும் வெற்றிப் படங்களுள் ஒன்று அபூர்வ சகோதரர்கள். இதில் கமல்ஹாசன் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். அதில் ஒரு கதாபாத்திரத்தில் குள்ளமான மனிதராக அப்பு என்கிற கதாபாத்திரத்தில் வருவார். கமல்ஹாசனின் இந்த வேடத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தன. படத்தை போல இளையராஜா இசையில் வெளியான பாடல்களும் மெஹாஹிட் தான். அதிலும் அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ என்கிற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. இந்த நிலையில், அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ பாடலுக்கு நடிகர் அஸ்வின் குமார் டிரெட் மில்லில் நடனமாடி அந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். சுமார் ஒரு வாரத்திற்கு பின்னர், இந்த வீடியோ கமல்ஹாசனின் கண்களில் பட, அந்த வீடியோவை பார்த்து ரசித்த கமல்ஹாசன், அதை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு தனது அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த வீடியோவில் ஆடிய அஸ்வின்  குமாரை பாராட்டிய கமல் கூறியிருப்பதாவது, நான் செய்த  நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்ப...

மறைந்த மலையாள இயக்குனர் சச்சியின் கண்கள் தானம்

மலையாள சினிமாவில் பல படங்களில் எழுத்தாளராகவும், கதையாசிரியராகவும் பணியாற்றிய சச்சி என்கிற கே.ஆர்.சச்சிதானந்தம், பிரித்விராஜ் - பிஜூ மேனன் நடித்த ஐய்யப்பனும் கோஷியும் படத்தின் மூலம் பிரபலமானார். 48 வயதாகும் இவருக்கு கடந்த வாரம் திடீரென இதயத்துடிப்பில் பிரச்சனை ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததையடுத்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட இவர் நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். சச்சி தனது கண்களை தானம் செய்ததால், அவரது கண்கள் அதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. அவரது கண்கள் விதிகளுக்குட்பட்டு விரைவில் வேறு ஒருவருக்கு பொருத்தப்படவிருக்கிறது. சச்சியின் மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். சச்சி கடந்த 8 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணிபுரிந்து இருக்கிறது. இவரது உடல் கொச்சியில் இருந்து சொந்த ஊரான திருச்சூருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்படுகிறது.

ஜி5-ல் வெளியானது காயத்ரி ரகுராமின் யாதுமாகி நின்றாய்

தாமரை போன்ற நடனப்பெண் இருபதாண்டு காலமாக அவள் வாழ்நாளில் சந்தித்த மற்றும் பயணித்த பல்வேறு நபர்களின்   கதையை சொல்கிறது `யாதுமாகி நின்றாய்'. பிரபல நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டரின் மகளான காயத்ரி ரகுராம் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில்  நடிகையாக அறிமுகமான காயத்ரி ரகுராம் பின்னர் நடன இயக்குநராக தனது துறையை மாற்றிக் கொண்டார். எனினும்  அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமாகிய நிலையில், தற்போது தற்போது `யாதுமாகி நின்றாய்' படத்தின் மூலம்  இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். நடிகர் வஸந்த் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த படம் சாதாரணமான, பின்னணியில் நடனமாடும் பெண்களின் மனதினுள் இருக்கும் கனவுகளையும், ஆசைகளையும் சொல்லும்  முதல் தமிழ் படமாகும். ஒரு பெண் தன் அன்றாட வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த படம் பின்னனி நடனம் ஆடும் பெண்களின் தினசரி வாழ்வில் நடக்கும் உண்மை...