Skip to main content

Posts

Showing posts from July, 2020

சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

டகால்ட்டி படத்திற்கு பிறகு சந்தானம் டிக்கிலோனா, பிஸ்கோத் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் டிக்கிலோனோ படத்தின் பல போஸ்டர்களை படக்குழு சமீபத்தில் வெளியிட்ட நிலையில், தற்போது பிஸ்கோஸ் படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றது. அதன்படி இந்த படத்தின் டிரைலர் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஆர்.கண்ணன் இயக்கத்தில் முழு நீள காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பாலா நடிக்கின்றனர். சவுகார் ஜானகி, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், பரத் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். The fun-filled Trailer of @iamsanthanam ’s #Biskoth will be OUT on Aug 3rd at 4:00 PM, Stay tuned for a fun filled roller coaster ride Produced & Directed By @Dir_kannanR A @tridentartsoffl Release @radhanmusic @masalapixweb @mkrpproductions @shammysaga @johnsoncinepro pic.twitter.com/MQUlPqULeL — Trident Arts (@tridentartsoffl) July 31, 2020 மசாலா பிக்ஸ், எம்.கே.ஆர்.பி.புரட...

சினிமாவுக்கு பதில் இணைய தொடர் - வடிவேலுவின் புதிய திட்டம்

வடிவேலு தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவர் வடிவேலு. இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் இயக்குனர், தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக திரைப்படங்களில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு தடை விதித்துள்ளது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. பல்வேறு பட வாய்ப்புகள் வந்தும் அவரால் நடிக்க முடியவில்லை. சமீபத்தில் கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. அதே நேரத்தில் சுராஜ் இயக்கும் புதிய படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. சுராஜ் இயக்கத்தில் முதலில் படமாக உருவாக இருந்த நிலையில், தற்போது அதனை இணைய தொடராக எடுக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து இணைய தொடருக்கு ஏற்றபடி கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. வடிவேலு நடிக்கும் இந்த தொடர் திகில் கலந்த திரில்லர் கதையாக உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. வடிவேலு, சுராஜ் இயக்கத்தில் தலைநகரம், மருதமலை, கத்திசண்டை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் பல்வே...

நடிகர் அணில் முரளி உடல்நலக்குறைவால் காலமானார்

அணில் முரளி மலையாள சினிமாவில் பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் அணில் முரளி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார். தமிழ் சினிமாவில் நிமிர்ந்து நில், தனி ஒருவன், ஆறு, நாடோடிகள் 2, மிஸ்டர்.லோக்கல் உள்ளிட்ட 13 படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். 56 வயதான அணில் முரளி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அணில் முரளியின் மறைவுக்கு தமிழ், மலையாள திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

லிப்ட் படத்தின் டப்பிங்கை முடித்த கவின்

சின்னத்திரை மூலம் பிரபலமான கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார். இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமும் உருவாகிவிட்டது. முன்னதாக சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவின் நட்புனா என்னானு தெரியுமா படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்திருக்கிறார். தற்போது ‘லிப்ட்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், லிப்ட் படத்திற்கான டப்பிங்கை முடித்துவிட்டதாக கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நாயகியாக பிகில் பட புகழ் அம்ரிதா ஐயர் நடித்திருக்கிறார். காயத்ரி ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். Dubbing done.. 👍 #LIFT pic.twitter.com/XjVncFcRMO — Kavin (@Kavin_m_0431) July 29, 2020 ஈகா என்டர்டெயின்மெண்ட் சார்பில் ஹேப்ஸி தயாரித்துள்ள இந்த படத்தை வினித் வரபிரசாத் இயக்கியிருக்கிறார். மைக்கேல் பிரிட்டோ இசையமைக்கும் இந்த படத்திற்கு எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், கொரோனா ஊரடங்...

என்னை நானே செதுக்க காரணமானவர் அஜித் - பிரசன்னா புகழாரம்

தல அஜித்குமார் சினிமாவுக்கு வந்து 28 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், அஜித் ரசிகர்கள் இதனை சிறப்பான போஸ்டர் மூலம் அதனை கொண்டாடி வருகின்றனர். #28YrsOfAjithismCDPBlast என்ற ஹேஷ்டேக்குடன் அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் இதனை ட்ரெண்டாக்கி வருகின்றனர். மேலும் தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர், நடிகைகளும் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில் அஜித்தின் 28 வருடங்களை கொண்டாடும் போஸ்டரை வெளியிட்ட நடிகர் பிரசன்னா, தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “நடிகனாக வேண்டும் என்ற எனது கனவுக்கு வலுசேர்த்த பெயர், என்னை நானே செதுக்கிக் கொள்ள கற்றுக்கொடுத்த பெயர், தோல்விகளை கடந்து அடுத்த கட்டத்திற்கு நகர எனக்கு உத்வேகம் அளித்த பெயர், கஷ்ட காலத்தில் என்னை தாங்கி பிடித்து பின்வாங்காத போராளியாக மாற்றிய அந்த பெயர் தல அஜித்குமார்” என்று கூறியுள்ளார். A name which strgthened my dream to be an actor;A name which taught me to be self made;A name which fueled me to move ahead with failures;A name which held me together @ difficult times;A name that makes me a fighter who never givs up #Tha...

பிறந்தநாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட துல்கர் சல்மான்

வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் நடிகையர் திலகம். இதில் சாவித்ரியாக கீர்த்தி சுரேசும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடித்திருந்தனர். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், வைஜெயந்தி மூவிஸ் வழங்க, ஸ்வப்னா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க துல்கர் சல்மான் ஒப்பந்தமாகியிருக்கிறார். துல்கர் சல்மானின் பிறந்தநாளான இன்று இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வௌியிட்டுள்ளனர். ஹனு ராகவாபுடி இயக்கும் இந்த படம் 1964-ஆம் ஆண்டில் நடைபெறும் வகையில் ஒரு ப்ரீயட் காதல் கதையாக உருவாகவிருக்கிறது. It is my pleasure and honor to associate with Hanu Raghavapudi, Swapna Cinemas and Vyjayanthi Movies for this trilingual period drama. Thank you for this lovely surprise. Can’t wait to don the role of Lieutenant Ram. @hanurpudi @Composer_Vishal @SwapnaCinema @VyjayanthiFilms pic.twitter.com/9yWYeNdrjU — dulquer salmaan (@dulQuer) July 28, 2020 தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட்...

நிலத்தை உழ மகள்களை பயன்படுத்திய விவசாயிக்கு டிராக்டர் வாங்கிக் கொடுத்த சோனு சூட்

ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்துக்கு அருகே உள்ள மதனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகேஸ்வர ராவ் என்கிற விவசாயி காளைகளுக்கு பதிலாக தனது மகள்களை வைத்து நிலத்தை உழுத வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரும் நஷ்டத்தை சந்தித்த அந்த விவசாயி, தனது நிலத்தை உழுவதற்கு தேவையான ஜோடி மாடுகள் வாங்க தன்னிடம் பணமில்லாத காரணத்தால் தனது இரு மகள்களை நிலத்தை உழ வைத்துள்ளார். அந்த விவாசியின் மகள்கள் நிலத்தை உழும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதனைப் பார்த்த பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் அந்த விவசாய குடும்பத்துக்கு உதவ முன்வந்தார். நாளை காலை அந்த விவசாயிக்கு தேவையான இரு காளை மாடுகள் கிடைக்கும். அந்த பெண்கள் இருவரும் அவர்களது படிப்பில் கவனம் செலுத்தட்டும் என்று கூறினார். Spoke with @SonuSood ji & applauded him for his inspiring effort to send a tractor to Nageswara Rao’s family in Chittoor District. Moved by the plight of the family, I have decided to take care of the education of the two daughters and help them pursue their dreams pic.twitter....

அந்த வார்த்தையை கேட்டாலே பயம் வருகிறது - பூர்ணா

பூர்ணா தமிழ் சினிமாவில் தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகைகளுள் ஒருவர் நடிகை பூர்ணா. இவர் சமீபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரு கும்பல் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நகை கடை அதிபர் எனக்கூறி பூர்ணாவை திருமணம் செய்ய வேண்டும் என்றும், போலி பெயரில் பணம் பறிக்க முயன்றதாகவும் அந்த கும்பல் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அந்த கும்பலை கைது செய்தனர். இந்த நிலையில், நடிகை பூர்ணா சமீபத்தில் தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், திருமணம் என்ற சொல்லை கேட்டாலே பயம் வருகிறது. எனவே எனது பெற்றோரிடம் எனக்கு சில காலங்கள் அவகாசம் கொடுக்கும்படி கேட்டிருப்பதாக கூறியுள்ளார். பூர்ணா தற்போது ஜோசப் படத்தின் தமிழ் ரீமேக்கிலும், கங்கனா ரனாவத்தின் தலைவி படத்திலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் லாக்கப் படம் அடுத்த மாதம் ஓடிடி தளத்தில் ரிலீசாக இருக்கிறது.

ஜோக்கர் மாதிரியான வில்லன் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க வேண்டும் - பார்த்திபன்

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட பார்த்திபன் சமீபத்தில் அளித்த பேட்டியில், தொடக்கத்தில் அஜித்துடன் பணிபுரிந்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அஜித் - பார்த்திபன் இருவரும் உன்னைக்கொடு என்னைத் தருவேன், நீ வருவாய் என ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். அஜித்தின் ஆரம்ப கால கட்டத்தில் அவருடன் பணிபுரிந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பார்த்திபன், அஜித் படத்தில் வில்லானாக நடிக்கும் வாய்ப்பு வந்தால் அதனை ஏற்க தயாராக இருப்பதாக கூறினார். ஆனால், அஜித் ஜோக்கர் பட வில்லன் போன்ற ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்பது எனது விருப்பம். வாலி படத்தில் அவரது வில்லத்தனமாக கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றார். பார்த்திபன் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு முடங்கியிருக்கும் நிலையில், நிலைமை சீரானதும் எஞ்சிய படப்பிடிப்பை துவங்கலாம் என்று அஜித் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட நடிகை விஜயலட்சுமி - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கன்னட சினிமாவில் அறிமுகமாகி பின்னர் தமிழில் பிரண்ட்ஸ் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. பிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். வாழ்த்துக்கள், பாஸ் என்கிற பாஸ்கரன், தம்பிக்கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக தமிழில் மீசைய முறுக்கு படத்தில் ஹிப்ஹாப் ஆதியின் அம்மாவாக நடித்திருந்தார். பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் இவர், இன்று தனது வீட்டில் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனைத் தொடர்ந்து சென்னை அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த இருக்கின்றனர். இவர் தற்கொலை முயற்சி செய்யும் முன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை குறிப்பிட்டு இது எனது கடைசி வீடியோ, எனக்கு ஆதரவு அளித்த நண்பர்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மாட்டுக்கு பதில் மகள்களை வைத்து நிலத்தை உழுத விவசாயிக்கு உதவிய சோனு சூட்

மகள்களை வைத்து நிலத்தை உழுத விவசாயி, சோனு சூட் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்துக்கு அருகே உள்ள மதனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் காளைகளுக்கு பதிலாக தனது மகள்களை வைத்து நிலத்தை உழுதுள்ளார். கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரும் நஷ்டத்தை சந்தித்த அந்த விவசாயி, தனது நிலத்தை உழுவதற்கு தேவையான ஜோடி மாடுகள் வாங்க தன்னிடம் பணமில்லாத காரணத்தால் தனது இரு மகள்களை நிலத்தை உழ வைத்துள்ளார். அந்த விவாசியின் மகள்கள் நிலத்தை உழும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த வீடியோ பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் பார்வைக்கு வர, அவர் அந்த விவசாய குடும்பத்துக்கு உதவ முன்வந்துள்ளார். அந்த வீடியோவை குறிப்பிட்டு சோனு சூட், நாளை காலை இரு காளை மாடுகள் அந்த விவசாயிக்கு கிடைக்கும். அந்த பெண்கள் இருவரும் அவர்களது படிப்பில் கவனம் செலுத்தட்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Tomorrow morning he will have a pair of ox 🐂 to plough the fields. Let the girls focus on their education.. कल सुबह से दो बैल इसके खेत जोतेंगे. किसान हमारे देश का गौरव है।Protect them....

கொரோனா தொற்றில் இருந்து மீண்ட விஷால் - ஜி.கே.ரெட்டி

விஷால், ஜி.கே.ரெட்டி கொரோனா பெருந்தொற்றால் திரையுலகமே முடங்கிப் போயிருக்கிறது. திரையுலகை சேர்ந்த பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். அந்த வகையில் நடிகர் விஷால் அவரது தந்தை மற்றும் விஷாலின் மேனேஜருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. முதலில் தனது தந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், அவரை கவனித்துக் கொண்ட தனக்கும் அதீத காய்ச்சல், சளி ஏற்பட்டதால் தனக்கும் அறிகுறி இருப்பதாக கூறி தானும், தனது மேனேஜரும் தனிமைப்படுத்தப்பட்டதாக விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Yes it’s True, my Dad was tested Positive, by helping him I had the same symptoms of High Temperature, Cold, Cough & was the same for my Manager. All of us took Ayurvedic Medicine & were out of Danger in a week’s time. We are now Hale & Healthy. Happy to Share this....GB — Vishal (@VishalKOfficial) July 25, 2020 மூவரும் தனிமைப்படுத்தப்பட்டு ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒரு வாரத்தில் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், தற்போது நலமாக உள்ளதாகவும் நடிகர் விஷால் தெரிவித்து...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா - பாண்டிராஜ் இணையும் குடும்ப படம்

இயக்குனர் பாண்டிராஜ், நடிகர் சூர்யா சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருக்கிறார். அதன்பிறகு ஹரி இயக்கத்தில் அருவா என்கிற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பாண்டிராஜ் ஏற்கனவே சூர்யாவை வைத்து பசங்க 2 படத்தை இயக்கியிருக்கிறார். சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் கடைக்குட்டி சிங்கம் என்கிற வெற்றிப் படத்தையும் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா - பாண்டிராஜ் கூட்டணியில் ஆக்‌ஷன் கலந்த குடும்ப படமாக உருவாகவிருக்கும் பிரம்மாண்ட படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறது. பாண்டிராஜ் இயக்கிய நம்ம வீட்டு பிள்ளை படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பாண்டிராஜ் - சூர்யாவுடன் இணைய சன் பிக்சர்ஸ் விரும்புவதால் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார...

கவின் படத்தில் இணைந்த பிகில் பட பிரபலம்

சின்னத்திரை மூலம் பிரபலமான கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார். இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமும் உருவாகிவிட்டது. முன்னதாக சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவின் நட்புனா என்னானு தெரியுமா படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்திருக்கிறார். தற்போது ‘லிப்ட்’ என்கிற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தில் நாயகியாக பிகில் பட புகழ் அம்ரிதா ஐயர் நடித்திருக்கிறார். கவின் - அம்ரிதாவின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் பல சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், தற்போது பிகில் படத்தில் நடித்த மற்றொரு நடிகையும் லிப்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனைகளில் ஒருவராக நடித்த காயத்ரி ரெட்டி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காயத்ரி ரெட்டி ஈகா என்டர்டெயின்மெண்ட் சார்பில் ஹேப்ஸி தயாரித்துள்ள இந்த படத்தை வினித் வரபிரசாத் இயக்கியிருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மைக்கேல் பிரிட்டோ இசையமைக்கும் இந்த படத்திற...

ரஜினி ரசிகராக சுஷாந்த் - தில் பேச்சரா படத்தை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் 14-ந் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலை இந்திய திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் இவரது தற்கொலைக்கு காரணம் பாலிவுட்டில் இருக்கும் வாரிசு நடிகர், நடிகைகள் தான் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. பலரும் தங்களது அனுபவங்களை பகிர ஆரம்பித்தனர். இந்த நிலையில், சுஷாந்த் கடைசியாக நடித்த 'தில் பேச்சரா' படம் ஓடிடி தளத்தில் நேற்று வெளியானது. இந்தப் படத்திற்கு பாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தை தமிழ் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். காரணம், தில் பேச்சரா படத்தில் சுஷாந்த் சிங் தீவிர ரஜினி ரசிகராக நடித்திருக்கிறார். படத்தில் அவர் ரஜினிகாந்த் போன்று ஒரு நடிகராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அவரது நண்பர் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் போன்று நடித்திருக்கிறார். சுஷாந்த் சிங் பயன்படுத்தும் செல்போன் கவரில் கூட ரஜினியின் படம் இடம்பெற்றிருக்கிறது. நான் ரஜினியை வணங்குகிறேன் என்ற வசனமும் படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், ...

தேசிய விருது இயக்குனருடன் மீண்டும் இணையும் தனுஷ்

பொல்லாதவன் படத்தின் மூலம் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி முதல் முறையாக இணைந்தது. பின்னர், ஆடுகளம் படத்தில் இந்த கூட்டணிக்கு தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களிலும் இணைந்து நடித்தனர். இந்த நிலையில், இந்த தனுஷ் - வெற்றிமாறன் 5-வது முறையாக இணைந்து இணையவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் இந்த படத்தை தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. வெற்றிமாறன் அடுத்ததாக சூரியை வைத்து மீரான் மைதீன் எழுதிய அஜ்னபி என்ற கதையையும், சூர்யாவை வைத்து செல்லப்பா எழுதியிருக்கும் வாடி வாசல் என்கிற கதையையும் படமாக இயக்கவிருக்கிறார். இதில் சூரி நடிக்கும் படத்தை  ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் - வெற்றிமாறன் இணையும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ஆண்டனிக்கு ஜோடியான ரித்திகா சிங்

விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. ஆனந்த கிருஷ்ணன், விஜய் மில்டன், பாலாஜி கே.குமார் உள்ளிட்டோர் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த நிலையில், விஜய் ஆண்டனி பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இந்த படத்தை பிரியா கிருஷ்ணசாமி இயக்கவிருக்கிறார். பிச்சைக்காரன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில், விஜய் ஆண்டனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகை ரித்திகா சிங், அவருடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். பாலாஜி கே.குமார் இயக்கும் படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ரித்திகா நடிக்கவிருக்கிறார். So happy to be associated with this team ❤️ #HBDVijayAntony #DirBalajiKumar pic.twitter.com/DJQiqMKPFD — Ritika Singh (@ritika_offl) July 24, 2020 இந்த படத்தை இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ், டேபிள் பிராபிட் இணைந்து தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தை கலக்கும் வைக்கம் விஜயலட்சுமியின் கிக்கு செம கிக்கு

பிரபல பின்னணி பாடகியான வைக்கம் விஜயலட்சுமி, தனது தனித்துவமான குரலால் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்திருக்கிறார். பாடல் மட்டுமல்லாது சிறந்த வீணை இசைக் கலைஞராகவும் இருக்கிறார். இவர் தற்போது ‘கால் டாக்ஸி’ என்கிற படத்தில் ‘கிக்கு செம்ம கிக்கு...’ என்ற குத்துப் பாடலை பாடியுள்ளார். தற்போது இந்த பாடலின் வரிகள் அடங்கிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை எழுதி, இசையமைத்திருக்கிறார் பாணர். கே.டி.கம்பைன்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.கபிலா தயாரித்துள்ள இந்த படம் தமிழகத்தில் கால்டாக்ஸி டிரைவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுவதன் பின்னணியில் இருக்கும் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாக உருவாகி வருகிறது. பா.பாண்டியன் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்தில் சந்தோஷ் சரவணன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அஸ்வினி நடிக்கிறார். மேலும் மொட்டை ராஜேந்திரன், மதன்பாப், ராமதாஸ், ஆர்த்தி கணேஷ், பசங்க சிவகுமார், கான மஞ்சரி சம்பத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு  டேவிட் அஜய் படத்தொகுப்பை கவனிக்க...

வைபவ் - வெங்கட் பிரபு நடிப்பில் திரில் காட்ட வரும் லாக்கப்

நடிகர் நிதின் சத்யா தயாரிப்பில் உருவாகி இருக்கும் இரண்டாவது திரைப்படமான ‘லாக்கப்’ வருகிற ஆகஸ்ட் 14 அன்று ஜி5 தளத்தில் வெளியாக இருக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஓடிடி தளத்தில் படங்கள் வெளியாகி வரும் நிலையில், ‘லாக்கப்’ படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. அறிமுக இயக்குனரான எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நடிகர் வைபவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க நாயகியாக வாணி போஜன் நடித்திருக்கிறார். இயக்குநர் வெங்கட் பிரபு இதற்கு முன் பார்த்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பூர்ணா, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Sometimes the answers to most crimes lie around us. All you have to do is take a good look. Watch #LockupOnZEE5 from Aug 14! #SuspenseAtEveryTurn @vp_offl @actor_vaibhav @Nitinsathyaa @vanibhojanoffl @shamna_kasim @SGCharles2 @ArrolCorelli @editor_mad @tridentartsoffl pic.twitter.com/WLLDf2x2Bs — ZEE5 Tamil (@ZEE5Tamil) July 22, 2020 நிதின் சத்யாவின் ஸ்வேத் -  எ நிதின் சத்யா ப...

பிச்சைக்காரன் 2 - கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்

விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. ஆனந்த கிருஷ்ணன், விஜய் மில்டன், பாலாஜி கே.குமார் உள்ளிட்டோர் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த நிலையில், விஜய் ஆண்டனியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. முன்னதாக கொரோனா ஊரடங்கின் போது பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை விஜய் ஆண்டனி எழுதி வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், விஜய் ஆண்டனி பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. அதன்படி விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தை பாரம் படத்தை இயக்கியதற்காக தேசிய விருது வென்ற பிரியா கிருஷ்ணசுவாமி இயக்கவிருப்பதாக படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில், இன்று அந்த படம் பிச்சைக்காரன் 2 என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டது. விஜய் ஆண்டனி மக்களை பார்த்து திரும்பி நிற்கும் படி இருக்கும் அந்த போஸ்டரை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். அந்த போஸ்டர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்காக எடுக்க...

ரூ.300 கோடி மோசடி புகார் - விளக்கமளித்து கே.ஈ.ஞானவேல்ராஜா அறிக்கை

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளரான ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் கே.ஈ.ஞானவேல் ராஜா ரூ.300 கோடி மோசடி செய்ததாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக ஞானேவேல் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கொரானா வைரஸ் தாக்கத்தால் பொது மக்களும், திரைத்துறையினரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் இன்றைய நிலையில்; சில தொலைக்காட்சி சேனல்கள், பத்திரிகைகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் என்னைப் பற்றிய உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்த செய்திகளில் எள் முனையளவும் உண்மையில்லை என்பதை தெரிவிப்பதற்காகவே இந்த விளக்க அறிவிப்பை வெளியிடுகிறேன். தமிழ்த் திரையுலகிற்கு; தேசிய விருது உட்பட பல விருதுகளையும், பல திறமையான நடிகர்களையும், படைப்பாளிகளையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் தந்துள்ள எனது 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட மகாமுனி திரைப்படம் 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 06-ம் தேதி ரிலீஸ் ஆனது. திரு. நீதிமணி என்பவர் 2019-மே மாதம் என்னை அணுகி மகாமுனி திரைப்படத்தின் தமிழ்நாடு ஏரியா விநியோக உரிமை தனக்கு வேண்டும்...

பிரபாஸ் படத்தில் நடிக்க பெரிய தொகை - தீபிகா படுகோனேவின் பயங்கர பிளான்

பாகுபலி படத்தின் மூலம் இந்திய சினிமாவில் முன்னணி நடிகராகிவிட்ட பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக ராதே ஷ்யாம் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், பிரபாஸின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. பிரபாஸின் 21-வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை சாவித்திரி வாழ்க்கை வரலாறு படமான நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கவிருக்கிறார். இதில் பிரபாஸ் ஜோடியாக முதல்முறையாக தீபிகா படுகோனே நடிக்கவிருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இந்த படத்தை வைஜெயந்தி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிப்பதற்காக தீபிகா படுகேனேவுக்கு ரூ.20 கோடி சம்பளம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிரபாஸ் படத்திற்கு இந்திய அளவில் நல்ல மார்க்கெட் உருவாகியிருப்பதால் படம் பெரிய தொகைக்கு விலைபோகும் என்பதால் தீபிகா அதிக சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில், இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகை என்ற...

இந்தியில் ரீமேக்காகும் அஜித்தின் பிளாக்பஸ்டர் படங்கள்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் அஜித்குமார். இவர் தற்போது போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அஜித்தின் வாலி, வரலாறு ஆகிய படங்களின் இந்தி ரீமேக் உரிமை தற்போது விலைபோகியிருக்கிறது. ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் இந்த படங்களின் ரீமேக் உரிமையை கைப்பற்றியிருக்கிறார். அஜித்தின் தீவிர ரசிகரான ராகுல், அவரது படங்களை மும்பையில் உள்ள தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார். ராகுல் அஜித்தின் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை படங்களில் பணிபுரிந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வலிமை படத்தின் வணிகத்திலும் அவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறுகிறார்கள். வாலி படத்தில் அஜித் அண்ணன், தம்பி என இரண்டு கதாபாத்திரத்திலும், வரலாறு படத்தில் அப்பா, மகன் என மூன்று கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றது. இதில் வாலி படத்தை எஸ்.ஜே.சூர்யாவும், வரலாறு படத்தை கே.எஸ்.ரவிக்குமாரும் இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிச்சைக்காரன் 2 - விஜய் ஆண்டனி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கொலைகாரன் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஆனந்த கிருஷ்ணன், விஜய் மில்டன், பாலாஜி கே.குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த நிலையில், விஜய் ஆண்டனியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. முன்னதாக கொரோனா ஊரடங்கின் போது பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை விஜய் ஆண்டனி எழுதி வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், விஜய் ஆண்டனி பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. #pichaikkaran2 #Bitchagadu2 pic.twitter.com/hsaEdEURMO — vijayantony (@vijayantony) July 24, 2020 அதன்படி விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தை பாரம் படத்தை இயக்கியதற்காக தேசிய விருது வென்ற பிரியா கிருஷ்ணசுவாமி இயக்கவிருப்பதாக படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில், இன்று பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு இருக்கும் என்று கூறப்படுகிறது. விஜய் ஆண்டனி பிக்சர்ஸ் சார்பில் பாத்திமா விஜய...

அருள்நிதியின் அடுத்த படம் - வெற்றிமாறன் வெளியிட்ட அறிவிப்பு

கே 13 படத்திற்கு பிறகு நடிகர் அருள்நிதி களத்தில் சந்திப்போம் படத்திலும், சீனு ராமசாமி இயக்கத்திலும், அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். அஜய் ஞானமுத்துவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இன்னாசி பாண்டியன் இயக்கும் புதிய படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார். இந்த படத்தின் தலைப்பை அருள்நிதியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு நேற்று வெளியிட்டது. இயக்குனர் வெற்றிமாறன், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் தலைப்பை வெளியிட்டார். இந்த படத்திற்கு டைரி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. உண்மைக் கதையில் கற்பனை கலந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #diary Thank you so much for the wonderful response!! Unexpected❤️🙏 @arulnithitamil @5starcreationss @Pavithrah_10 @AravinndSingh @RonYohann @gnanakaravel #Sprajasethupathi #pradipdinesh pic.twitter.com/EbH5mXXGSO — Innasi Pandiyan (@innasi_dir) J...

எல்லா மதமும் சம்மதமே, கந்தனுக்கு அரோகரா - ரஜினிகாந்த்

கருப்பர் கூட்டம் என்கிற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டதாக செந்தில்நாதன்,  குகன், சோமசுந்தரம் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்து கடவுள்கள் பற்றி மோசமாக விமர்சனங்களும் அந்த சேனலில் இடம்பெற்றுள்ளதையடுத்து அந்த சேனலில் இடம்பெற்றுள்ள 500 வீடியோக்களை சைபர் கிரைம் போலீசார் நீக்கிவிட்டனர். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இந்த விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்... ஒழியணும். எல்லா மதமும் சம்மதமே!!! கந்தனுக்கு அரோகரா !! #கந்தனுக்கு_அரோகரா pic.twitter.com/zWfRVpufXk — Rajinikanth (@rajinikanth) July 22, 2020 இவ்வாறு கூறியிரு...

புதிய உச்சம் - ரவுடி பேபி பாடலின் புதிய சாதனை

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய்பல்லவி - வரலட்சுமி நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான படம் மாரி 2. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இதில் ரவுடி பேபி என்ற பாடலை தனுஷ் எழுதி பாடி இருந்தார். பிரபு தேவா நடனம் அமைத்த இந்த பாடலில் தனுஷ், சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மாரி 2 படம் வெளியான சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலை படக்குழு யூடியூப்பில் வெளியிட்டது. இதையடுத்து சமூக வலைதளங்களில் வைரலான இந்த பாடல், அதிகமான பார்வையாளர்களை பெற்று பல்வேறு சாதனைகளை படைத்தது. #Rowdybabyhits900million pic.twitter.com/ViNImcTCio — Raja yuvan (@thisisysr) July 19, 2020 மேலும் சர்வதேச பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று சாதனை படைத்தது. அந்த வகையில், தற்போது இந்த பாடல் யூடியூப்பில் 900 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. இதனை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

பிரபாஸ் ஜோடியான தீபிகா படுகோனே - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பாகுபலி படத்தின் மூலம் இந்திய சினிமாவில் முன்னணி நடிகராகிவிட்ட பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக ராதே ஷ்யாம் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், பிரபாஸின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. பிரபாஸின் 21-வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை சாவித்திரி வாழ்க்கை வரலாறு படமான மகாநதி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கவிருக்கிறார். இதில் பிரபாஸ் ஜோடியாக முதல்முறையாக தீபிகா படுகோனே நடிக்கவிருக்கிறார். Deepika Padukone, welcome on board! Thrilled to have you be a part of this incredible adventure. #Prabhas @deepikapadukone @nagashwin7 #Prabhas21 #DeepikaPrabhas pic.twitter.com/PLdgPT6igz — Vyjayanthi Movies (@VyjayanthiFilms) July 19, 2020 மகாநதி படத்தை தயாரித்த வைஜெயந்தி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாக இருப்பதாகவும், கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு அடுத்த ஆண்டு இந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்...

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் வைபவ் படம்

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காட்டேரி’. வைபவ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் வரலட்சமி சரத்குமார், ஆத்மிகா, சோனம் பஜ்வா மற்றும் மணாலி ரதோட் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், யூடியூப் சாரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். யாமிருக்க பயமே படத்தை இயக்கிய டீகே இயக்கியிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிந்துவிட்ட நிலையில், சில காரணங்களால் படம் ரிலீசுக்கு வரவில்லை. படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துவிட்ட நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தை வெளியிடும் சூழல் இல்லாததால் நேரடியாக ஓடிடி இணையதளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இரண்டு முன்னணி ஓடிடி தளங்கள் படத்தை வாங்க முனைப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காமெடி கலந்த திகில் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு விக்கி ஒளிப்பதிவு செய்ய, எஸ்.என்.ப...

அரசியலில் சர்ச்சையை கிளப்பிய நாயகி

மாடலாக தனது கேரியரை துவங்கி, தமிழில் ஒரு சில நடித்துவிட்டு பின்னர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பெரிய வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானாராம் சர்ச்சைக்கு பெயர் போன நடிகை. சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சி மற்றும் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் சர்ச்சைக்குள்ளான கருத்துக்களையும் பதிவிட்டு வருவாராம். சமீபத்தில் மூன்றெழுத்து நடிகை தன்னை காப்பியடிப்பதாக குற்றம் சாட்டியிருந்தாராம். மேலும் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களையும் வம்புக்கு இழுத்தாராம். தற்போது அரசியல் வாரிசான நடிகர் ஒருவருடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அரசியலில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறாராம்.

ஆதி - நிக்கி கல்ராணி விரைவில் திருமணம்?

தமிழ், தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான ஆதியும், தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள நிக்கி கல்ராணியும் காதலித்து வருவதாக தெலுங்கு திரையுலகில் பேசி வருகிறார்கள். ஆதியும், நிக்கி கல்ராணியும் தமிழில் யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படங்களில் நடிக்கும் போது இவர்களுக்கு காதல் மலர்ந்ததாகவும், விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெலுங்கி சினிமாவில் செய்தி பரவி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் ஆதி தனது தந்தையின் பிறந்தநாளை தனது வீட்டாருடன் கொண்டாடினார். இதில் நடிகை நிக்கி கல்ராணியும் கலந்து கொண்டுள்ளார். கொரோனா ஊரடங்கினால் வேறு யாரையும் அழைக்காத ஆதி, நிக்கி கல்ராணியை மட்டும் அழைத்து இருக்கிறாராம். ஆதி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது குடும்பத்தினருடன், நிக்கி கல்ராணி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதையடுத்து, இவர்களது காதல் உண்மை தான் என்றும், விரைவில் திருமண அறிவிப்பு வெளியாகும் என்றும் தெலுங்கு திரையுலகினர் கூறுகிறார்கள்.

விஜய் படம் குறித்த வதந்தி - கொரோனாவுக்கு பிறகே அதிகாரப்பூர்வ முடிவு

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படமான தளபதி 65 படத்தை தயாரிக்க இருந்த சன் பிக்சர்ஸ் பட்ஜெட் காரணமாக அந்த படத்தில் இருந்து விலகுவதாகவும், மெர்சல் படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் சில தகவல்கள் பரவி பரவி வந்தது. இந்த நிலையில், அந்த தகவல் வெறும் வதந்தி என நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த படத்தை தயாரிப்பதில் சன் பிக்சர்ஸ் உறுதியாக இருப்பதாகவும், கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகே படத்தின் பட்ஜெட், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் இசையமைப்பாளர் தமன் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முருகதாஸ் தற்போது தளபதி 65 படத்திற்கான திரைக்கதை எழுதுவதில் பிசியாக இருக்கிறார். இந்த படம் குறித்து விஜய் மற்றும் கலாநிதி மாறன் எடுக்கும் இறுதி முடிவைத் தொடர்ந்து மற்ற பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது என...

வில்லனான கிருஷ்ணா - கவுதம் மேனன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் கவுதம் மேனன் தற்போது ஜோஷ்வா இமை போல் காக்க என்ற படத்தை இயக்கி வருகிறார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தில் நாயகனாக வருணும், நாயகியாக ராஹேவும் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் கிருஷ்ணா வில்லனாக நடிப்பதாக இயக்குனர் கவுதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஜோஷ்வா படத்தின் முதல் சிங்கிள் பாடலான நான் உன் ஜோஷ்வா படக்குழு இன்று வெளியிட்டது. அந்த பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட கவுதம் மேனன், கிருஷ்ணாவை இந்த படத்தில் வில்லனாக அறிமுகம் செய்வதை அறிவிக்க வேண்டிய நேரம் இதுதான். எனக்காக இந்த கதாபாத்திரத்தில் நடித்த கிருஷ்ணாவுக்கு நன்றிகள். உண்மையில் நீங்கள் சிறந்த மனிதர் என்று குறிப்பிட்டுள்ளார். https://t.co/qszYuoCIux It’s also the time to introduce Krishna as the villain in the film Joshua.. Thank you @Actor_Krishna for agreeing to do this for me! In return, you are looking really good brother😊 — Gauthamvasudevmenon (@menongautham) July 16, 2020 கவுதம் மேனன் பதிவுக்கு பதில் அளித்த கிருஷ்ணா,...

தமிழ் கற்பிக்கும் இணையதளம் - மதன் கார்க்கியின் புதிய முயற்சி

கவிப்பேரரசு வைரமுத்துவின் மகனும், பாடலாசிரியருமான மதன் கார்க்கி, தமிழ் கற்க விரும்புவோர் இணையதளம் வாயிலாக கற்றுக் கொள்வதற்கு முயற்சி எடுத்திருக்கிறார். இணைய வழியில் தமிழ் கற்க விரும்புவோருக்கு ஏற்றவாறு கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் ‘பயில்’ எனும் பாடத்திட்டத்தை வடிவமைத்து, அதன் அடிப்படையில் இணைய வகுப்புகளையும் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் நூற்றுக்கணக்கானோர் இந்த வகுப்புகளில் தமிழ் பயின்று வருகிறார்கள். ‘எழுது’, ‘பேசு’, ‘இலக்கணம்’, ‘இலக்கியம்’ என்ற நான்கு வகுப்புகள் இந்தப் பயில் இணைய அரங்குகளில் வழங்கப்படுகிறது. அனைத்து வயதினரும் இணைந்து பயிலலாம். இரண்டு ஆண்டு ஆராய்ச்சியில் வடிவமைக்கப்பட்ட இந்த பாடத் திட்டத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மதுரையில் உள்ள குயீன் மீரா பன்னாட்டுப் பள்ளி நிர்வாகம் பயில் பாடத்திட்டத்தை தேர்ந்தெடுத்து தங்கள் மாணவர்களுக்குப் பயிற்றுவித்து வருகிறார்கள். பாடல்கள், கதைகள், ஓவியங்கள் போன்ற கலை வடிவங்களோடு இணைய விளையாட்டுக்களின் மூலம் தமிழ் பயிற்றுவித்து வருகிறார்கள். பயில் பாடத்திட்டத்தின் ‘எழுது’ வகுப்பு மிக எளிமையான புதுமையான முறையில் த...

பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே இணைய தொடருக்காக மாஸ் தோற்றத்துக்கு மாறிய சரத்குமார்

தமிழ் சினிமாவின் பிரபல மூத்த நடிகரான சரத்குமார் சமீபகாலமாக படங்களில் அதிகமாக நடிப்பதில்லை. கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் பாம்பன் படம் உருவாகி வருகிறது. இதுதவிர மணிரத்னமின் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போதைய காலகட்டத்தை பொறுத்த வரை இணை தொடர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. பல்வேறு முன்னணி நடிகர்களும் இணைய தொடர்களில் நடிக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சரத்குமாரும் பிரபல ஓடிடி தளத்திற்காக நடிக்கவிருப்பதாக நடிகை ராதிகா சரத்குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே என பெயரிடப்பட்டுள்ள அந்த தொடரின் போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டர்களில் சரத்குமார் மாஸ் தோற்றத்தில் ஸ்டைலாக நிற்கிறார். இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அர்ச்சனா எழுதிய பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே என்கிற நாவலை தழுவி இந்த தொடர் உருவாக இருக்கிறது. A Good day to welcome you to the OTT world! ✨ Happy Birthday Sarath! @realsarathk...

கந்த சஷ்டி கவசம் பற்றிய அவதூறு - நடிகர் ராஜ்கிரண் கடும் கண்டனம்

கருப்பர் கூட்டம் என்கிற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டதாக சென்னை வேளச்சேரியை சேர்ந்த செந்தில்நாதன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்து கடவுள்கள் பற்றி மோசமாக விமர்சனங்களும் அந்த சேனலில் இடம்பெற்றுள்ளதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், நடிகர் ராஜ்கிரண் கந்த சஷ்டி கவசம் குறித்து கூறியிருப்பதாவது, ஒவ்வொரு மனிதனுக்கும், எந்த வகையிலேனும், தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ள  உரிமை இருக்கிறது. அது, அவனது சுதந்திரம். முருகப்பெருமானை நம்புவோர்க்கு, கந்த சஷ்டி கவசம் என்பது, ஒரு பாதுகாப்பு அரண். அதை ஆழ்ந்து படித்தால், அறிவியல் பூர்வமான, மனோதத்துவ ரீதியான ஆத்ம பலன்கள் இருக்கின்றன. இறைவனை நம்பாதோர்க்கு, நம்பாமை என்பது, அவர்களின் சுதந்திரம். நம்பிக்கை கொண்டோர்க்கு, நம்புதல் என்பதே சுதந்திரம். இதில், அவரவர் எல்லையோடு அவரவர்கள் நின்று கொள்வது தான், மேன்மையானது. தேவையில்லாமல் மற்றவர் எல்லைக்குள் புகுந்து, விமர்சனம் செய்வதென்பது, மிகவும் கீழ்மையானது. இந்த கொடிய கொரோனா கால கட்டத்தில், நோயோடும், நோய் பயத்தோடும், பொருளாதா...